எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியை கேரள குழுவினர் தொடங்கி உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்பட்டன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், 6 இடங்களில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவ கழிவுகளை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட லாரி உரிமையாளர் செல்லத்துரை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில், கேரளாவில் இருந்து வாகனங்கள் மற்றும் 25 பேர் கொண்ட குழுவுடன் வந்த அதிகாரிகள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை கேரள எல்லை வரை தமிழக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர்.