நடுவட்டம் காவல் நிலையத்திற்குள் சாவகாசமாக நுழைந்த சிறுத்தை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் முதுமலை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வனவிலங்குகிள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில், உதகை அருகே உள்ள நடுவட்டம் காவல் நிலைய வளாகத்திற்குள் இரவு நேரத்தில்  சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. பிரதான அறைக்குள் வந்த சிறுத்தை அங்கும் இங்கும் நோட்டமிட்ட பின் அங்கிருந்து மெதுவாக வெளியே சென்றது. அப்போது அங்கிருந்த காவலர் சாதூர்யமாக சிறுத்தை வெளியே சென்ற அடுத்த நொடியே கதவை மூடினார். இந்த திக் திக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவான நிலையில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதே போன்று நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று, மரக்கிளையில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு ஓய்வெடுத்துள்ளது.  இதனை சுற்றுலா பயணிகள் செல்போனில் பதிவு செய்து அச்சத்துடன் ரசித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Night
Day