நட்சத்திர வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நட்சத்திர வேட்பாளர்களாக அறியப்படுபவர்கள், அவரவர் போட்டியிடும் தொகுதியில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். எந்தெந்த தொகுதியில் எந்தெந்த நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஓரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களை அறிவித்துள்ள அரசியல் கட்சியினர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்படும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகை ராதிகா சரத்குமார், கேப்படனின் மூத்த மகன் விஜய பிரபாகரன், சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை அடையாறில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மோடியின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தென்சென்னை மாவட்டத்தில் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக உதகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், உதகை காபி ஹவுஸ் பகுதியில் இருந்து தொண்டர்களோடு ஊர்வலமாக வந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான அருணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை உடனிருந்தார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார்,  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான முனைவர் ஜெயசீலனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்,  தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மணுவை தாக்கல் செய்தார்.

Night
Day