எழுத்தின் அளவு: அ+ அ- அ
மாண்புமிகு அம்மாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய நலத்திட்ட உதவி பொருட்கள் வீடு தேடிசென்று பயனாளிகளிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட பயனாளிகள் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 24ஆம் தேதி உசிலம்பட்டி PMT கல்லூரி எதிரேயுள்ள திடலில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு ஏழை எளிய மக்கள், மாணவ மாணவிகள், மகளிர் குழுவினர், விவசாயிகள், மாற்றுதிறனாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் மடிக்கணினி, மிதிவண்டி, தையல் இயந்திரம், மருந்து தெளிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு இயந்திரம், ஆடு கோழி வளர்ப்பு உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புரட்சித்தாய் சின்னம்மாவிடமிருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று நலத்திட்ட உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்குட்பட்ட, வேலாயுதபுரம் வ.உ.சி காலனி எம்.எம். கே. மகளிர் குழுவிற்கு கோழிப்பண்ணை கூண்டு மற்றும் கோழிகள் ஒப்படைக்கப்பட்டன.