நாகர்கோவிலில் மணப்பெண்ணை சாரட்டு வண்டியில் அழைத்து சென்ற குடும்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணப்பெண்ணை குதிரை பூட்டிய சாரட்டு வாகனத்தில் அழைத்து சென்ற காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஸ்கேனியா - ரோஹித் தம்பதியினரின் திருமணத்தை ஒட்டி மணப்பெண் குதிரை பூட்டிய சாரட்டு வண்டியில் ராமன்புதூர் சாலை வழியாக திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். மணப்பெண்ணுடன் சிறு குழந்தைகளும் குதிரை சாரட்டு வண்டியில் சென்ற காட்சி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. 

Night
Day