நாகையில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் குருவை நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


கொடியாலத்தூர், மயிலாடி மீனம்பநல்லூர், வடுகச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியதால் நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்த நிலையில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே தமிழக அரசு வேளாண் துறை மூலம் அதிகாரிகளை பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day