நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே நடுகடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடியக்கரையில் இருந்து பைபர் படகில்  அக்கரைப்பேட்டையை சேர்ந்த 3 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கொள்ளையர்கள், 3 பேரையும் கத்தி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தனர். பின்னர் மீனவர்களிடமிருந்த வலை, செல்போன், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day