தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீக்குளித்த நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அங்கிருந்த போலீசார் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளித்த நபர் வாட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. சேகரின் மகள் மற்றும் மனைவி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் மன உளைச்சலில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...