நாகை: வெயில் மற்றும் பனிப்பொழிவால் மாம்பூக்கள் கருகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையில் கடும் வெயில் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மாம்பூக்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான தெற்குப்பொய்கைநல்லூர், காமேஸ்வரம், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், வெயில் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக பூ கருகல் நோயால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்தாண்டு மா விளைச்சல் குறைவாக இருக்கும் எனவும் இதை நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Night
Day