நாங்குநேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது எழுந்து சென்ற பெண்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது பெண்கள் எழுந்து சென்றதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். 


நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நெல்லை மற்றும் குமரி மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பினர். இதனால் அங்கு காலியாக இருந்த இருக்கைகளை கண்டு திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்

Night
Day