எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி - வேலூர் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 2 கோடி 83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணம் ஈரோடு பகுதியில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மிஷினில் வைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் பரமத்திவேலுார் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியில் உரிய ஆவணம் இன்றி தனியார் வங்கி ஏடிஎமிற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 53 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.