நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த பின் அரசு பேருந்தில் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தில் அரசு பேருந்தில் பயணித்த ஆட்சியரிடம், 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை என பயனாளி கூறியதால் ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஆட்சியர் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த பின் திருச்செங்கோடு சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த ஆட்சியர் உமா, சக பயணிகளிடம் அரசின் திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வரும் பெண் ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வரவில்லை என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் சம்பளம் விரைந்து வழங்கப்படும் என உறுதி அளித்தார். 

Night
Day