நாமக்கல்: புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பூங்கா சாலையில் சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது மோட்டார் வாகன ஊழியர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும், வாகன திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.

Night
Day