நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர் இந்தியாவில் ஊடுருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை, கோவை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் சண்முக நகர் பகுதியில் உள்ள யூடியூபரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முக்கிய வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கடிதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சாட்டை முருகன் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், இன்று சிவகிரி அடுத்த விஸ்வநாதப் பேரி பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இசை மதிவாணன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த பகை வென்றான் பகுதியை சேர்ந்த யூடியுபரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான விஷ்ணு பிரதாப் என்பர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில், ஒரு மொபைல் போன் மற்றும் பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய நான்கு புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் காளப்பட்டியில் உள்ள முருகனுக்கு சொந்தமான சரஸ்வதி கார்டனில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் உள்ள ரஞ்சித் குமார் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.








Night
Day