நாய் கடித்ததில் 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நாய் கடித்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய 13 வயதான மகன் விஸ்வா வடக்குக்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  கடந்த 7-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த விஸ்வாவை நாய் கடித்துள்ளது. இதனால் வலது கையில் காயம் ஏற்பட்ட விஸ்வாவை  செங்கல்பட்டு மாவட்டம் ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் விஷ்வாவிற்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதை தொடர்ந்து பதறிப்போன பெற்றோர், விஸ்வாவை  மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற ஒரகடம் போலீசார் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே, நாய் கடித்து சிறுவன் உயிரிழந்தது அவரது சொந்த ஊரான வடக்குப்பட்டு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day