நாளை தேவர் திருமகனார் குருபூஜை - புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62வது குருபூஜை விழாவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நாளை கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார். இதற்காக சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திலிருந்து புரட்சித்தாய் சின்னம்மா மதுரை புறப்பட்டு சென்றார்.

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த நாள், தேவர் ஜெயந்தி விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு, நாளை காலை 11.45 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த பெருமைக்குரிய விழாவில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தி, விழாவினை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day