நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரதமரை தொடர்ந்து வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில், தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, 12ம் தேதி சிவகங்கை, மதுரை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 13ம் தேதி கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Night
Day