நிஃபா வைரஸ் எதிரொலி - தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நிஃபா வைரஸ் பாதிபால் சிறுவன் உயிரிழந்தது எதிரொலியாக தமிழக கேரள எல்லைப் பகுதியான வாளையாரில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாலக்காடு மாவட்டத்தில் இருவருக்கு நிஃபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து கோவை வரும் பொது மக்கள் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Night
Day