எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி அருகே நிர்வாக அலுவலர் மீது சாணியை வீசியெறிந்து தாக்கிய பெண் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
வடக்கனந்தலில் கிராம நிர்வாக அலுவலராக தமிழரசி என்பவரும், கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதாவும் பணிபுரிந்து வந்தனர். இதனிடையே, சங்கீதா அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே இருந்த முன்விரோதத்தால், ஒருகட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்துக்குள் வைத்து சங்கீதா பூட்டி சம்பம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக சங்கீதா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சங்கீதா, பணியில் ஈடுபட்டிருந்த விஏஓ தமிழரசி மீது சாணியை வீசியெறிந்தும், தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தமிழரசி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின்பேரில் கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதா கைது செய்யப்பட்டார்.