நிலக்கோட்டை அருகே மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் எரிப்பு - பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மருத்துவக்‍ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் எரிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்‍கப்படும் குப்பைகள், மற்றும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் அந்தந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலை ஓரங்களில் கொட்டி எரிக்‍கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக்‍கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு சென்று பிரித்து முறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day