எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் வீடு கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது குறித்த ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகரனின் வீடு சென்னை கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், பென் கேமரா, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞானசேகரனின் வீடு கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில், வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் இந்த ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.