நில மோசடி வழக்கு - மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிட்கோ நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் மே 6-ம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது மனைவியுடன் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சுப்பிரமணியன் மாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றச்சாட்டு பதிவிற்கு இருவரும் மே 6 தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டு,  விசாரணையை ஒத்தி வைத்தார்

Night
Day