எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை வெள்ளம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உடைமைகள் மற்றும் பொருட்களை இழந்து தவித்த மக்களை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது ஊத்தங்கரை ஜீவாநகர், அண்ணாநகர் பகுதிகளில் நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள், சமைப்பதற்கு பாத்திரங்கள் வழங்கும்படி சின்னம்மாவிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற புரட்சித்தாய் சின்னம்மா, சென்னையிலிருந்து உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை கழக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை, வெள்ளத்தால் விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் மக்கள் உணவு, உடை மற்றும் பொருட்களை இழந்து தவித்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடந்த 2 மற்றும் 3 தேதி அன்று நேரில் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா, அரிசி, வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கடந்த 7ம் தேதி நேரில் சென்று பார்வையிட்ட புரட்சித்தாய் சின்னம்மா, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சேலை, வேட்டி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, ஊத்தங்கரை அடுத்த ஜீவா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள், தங்களுக்கு சமையல் செய்வதற்கு பாத்திரங்கள் வேண்டும் என சின்னம்மாவிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை ஏற்ற புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை திரும்பிய உடன், கோரிக்கை விடுத்த மக்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள், ஜீவா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கினர். தங்களது கோரிக்கையை ஏற்று, சமையல் பாத்திரங்களை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, அப்பகுதிமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
இதேபோன்று, ஊத்தங்கரை அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியபோது, அப்பகுதி மக்களும், சமையல் பாத்திரங்கள் வழங்கும்படி சின்னம்மாவிடம் கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளை ஏற்ற புரட்சித்தாய் சின்னம்மா சென்னையிலிருந்து சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை கழக நிர்வாகிகள் அப்பகுதி மக்களுக்கு வழங்கினர். தங்களின் வேண்டுகோளை ஏற்று தங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, அண்ணா நகர் பகுதி மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.