நிவாரணப் பொருட்கள் வழங்கிய சின்னம்மாவுக்கு விழுப்புரம் மக்கள் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடும் சேதத்தை சந்தித்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம், கீழ்மைலம் கிராம மக்கள், சமைப்பதற்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற புரட்சித்தாய் சின்னம்மா, சென்னையிலிருந்து உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை கழக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளையும், பொருட்களையும் இழந்து தவித்தனர். இதனையடுத்து புரட்சித்தாய் சின்னம்மா, விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நேரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். 

அந்த வகையில், கீழ்மைலம் கிராமத்திற்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட புரட்சித்தாய் சின்னம்மா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். புரட்சித்தாய் சின்னம்மாவிடமிருந்து நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட மக்கள், தங்களுக்கு சமையல் செய்வதற்கு பாத்திரங்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து புரட்சித்தாய் சின்னம்மா, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றவுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சமையல் பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள், அடுப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தாயுள்ளத்துடன் அனுப்பி வைத்தார்.    

புரட்சித்தாய் சின்னம்மா அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை, கீழ்மைலம் கிராமத்தில் காலனி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, கழக நிர்வாகிகள் வழங்கினர். தங்களது கோரிக்கையை ஏற்று நிவாரணப் பொருட்களை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கீழ்மைலம் பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழ்மைலத்தை சேர்ந்த மற்ற பகுதி மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவிடம் மேலும் பல உதவிப் பொருட்களை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து அங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கும் சின்னம்மா அனுப்பி வைத்த சமையல் பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை கழக நிர்வாகிகள் வழங்கினர். தங்களின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இதேபோன்று மரக்காணம் அருகே உள்ள முடங்கிமேடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சின்னம்மா அனுப்பி வைத்த நிவாரண உதவிப் பொருட்களை கழக நிர்வாகிகள் வழங்கினர். நிவாரண உதவிகளை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு முடங்கிமேடு பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். 

Night
Day