நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தேவதர்ஷினி என்ற மாணவி, +2 முடித்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு முறை நீட் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே மாதம் 5ம் தேதி நடைபெறவுள்ளது. தீவிரமாக படித்து வந்த தேவதர்ஷினி, நீட் தேர்வு அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தேவதர்ஷினி நேற்றிரவு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day