நீட் தேர்வு எழுதும் மாணவிகளுக்கான ஆடை கட்டுப்பாடு : அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வின்போது அடிக்கடி கழிவறை சென்று டயப்பர் மாற்ற அனுமதிக்க வேண்டும் என மாணவி தொடர்ந்த வழக்கில், தேசிய தேர்வு மையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் 4 வயதில் தீ விபத்தில் சிக்கியதால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், தேர்வின்போது டயப்பர் அணிந்திருக்கவும் அடிக்கடி டயப்பரை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிந்திருக்க அனுமதி வழங்கியிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Night
Day