நீதிக்கேட்டு கல்லூரிக்குள் நுழைந்த மாணவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை தெரிவிக்‍கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது காவல் துறையினருக்‍கும், மாணவர் சங்கத்தினருக்‍கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் இருந்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது தோழியுடன் விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். அன்று இரவு 10 மணியளவில் ஒரு மாணவி மட்டும் விடுதிக்கு வந்துள்ளார். மறுநாள் சனிக்கிழமை காலை உடல் முழுவதும் காயத்துடன் வந்த மற்றொரு மாணவியிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமான நண்பர் அழைத்ததாகவும், அங்கே சென்றதும் போதை பொருளை கொடுத்து 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். 

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 2 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் நீக்கி உள்ளதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமையை மறைத்து மாணவிகளுக்கு டிசி கொடுத்து அனுப்பிய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, கல்லூரி முன்பு திரண்ட மாணவர் சங்கத்தினர் முழக்கமிட்டனர். மாணவியின் உண்மை நிலை குறித்து கல்லூரி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என மாணவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். அப்போது காவல்துறையினருக்‍கும், போராட்டக்‍காரர்களுக்‍கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

varient
Night
Day