நீர்நிலையை ஆக்கிரமித்து திமுக அலுவலகம் - உடனடியாக இடிக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவீந்திரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், மதுரை பீ.பீ.குளத்தில் 30 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் திமுக இளைஞரணி நற்பணி மன்ற அலுவலகம், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை இடித்து அகற்ற உத்தரவிடவேண்டுமெனவும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அமர்வு முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை இடித்து அகற்ற வேண்டுமெனவும், அதற்காக அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டடம் இடிக்கப்படவில்லை எனவும், அலுவலகம் காலி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக திமுக கட்சி அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Night
Day