நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடிவிட்டது - மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா செய்து, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விபரீதத்தை முதலமைச்சர் நிறுத்தி கொள்ள வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு இழுத்து மூடிவிட்டு, பழங்குடிகள், பட்டியலின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் தொடர்ந்து அரசு பள்ளிகளின் தரம் கடுமையாக சரிந்து வருவதாகவும், அரசு பள்ளிகளை முறையாக நடத்த முடியாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவதாகவும் எல் முருகன் விமர்சித்தார். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விபரீதத்தை முதலமைச்சர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Night
Day