நீலகிரி: கோடையை வரவேற்கும் விதமாக பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் கோடையை வரவேற்கும் விதமாக பூத்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தில் சாலையோரங்களில் பூக்கும் ஜெகரண்டா, பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த மலர்கள் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பூக்கத் தொடங்கி மே மாதம் வரை காணப்படும். தற்போது ஊட்டி - கோவை சாலையில் மரப்பாலம் முதல் பர்லியார் வரை என பல்வேறு இடங்களிலும் இந்த மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரத்தில் உள்ள மலர்களை கண்டு ரசித்தும் மலர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

varient
Night
Day