நீலகிரி: விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 அரிய வகை பறவைகள் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த இந்தோனேஷியாவின் அரிய வகை பறவைகளை வனத்துறையினர் மீட்டனர். ஜாவா பிஞ்ச் என்ற சிறிய பறவைகள் இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டில் மட்டுமே அதிக அளவில் உள்ளன. இந்தியாவில் குறைந்த அளவில் உள்ளதால், இந்த பறவைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உதகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8  ஜாவா பிஞ்ச் பறவைகளை வனத்துறையினர் மீட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளனர்.

Night
Day