நீலகிரி: விளைநிலங்களில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே விளைநிலங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தண்ணீர் தேடி வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறுகின்றன. அந்த வகையில், சிறுமுகை வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டுயானைகள், சுண்டட்டி கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. விளைநிலங்களில் புகுந்த யானைகள் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள கிராமமக்கள், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Night
Day