நூதன முறையில் மதுபானப் பாட்டில்களை கடத்தியவர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் சோதனையிட்டனர். 


அப்போது அந்த நபரின் உடல் முழுவதும் புதுச்சேரி மாநில மதுபானப் பாட்டில்களை ஒட்டிக் கொண்டு நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நபரின் உடலில் ஒட்டப்பட்டிருந்த 120 மதுபானப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரிடம் விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த பாவாடை என்பதும், புதுச்சேரிக்கு சென்று அங்கு மதுபானப் பாட்டில்களை வாங்கி தனது உடலில் டேப்பால் ஒட்டிக் கொண்டு பேருந்து மூலம் பயணம் செய்து விழுப்புரம் கொண்டு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதனையடுத்து புதுச்சேரி மதுபானப் பாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்த பாவாடையை விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

Night
Day