எழுத்தின் அளவு: அ+ அ- அ
கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், அண்ணா திருவுருவச் சிலைக்கு, புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், அண்ணா நினைவு இல்லத்திற்கு வெளியே வந்த புரட்சித்தாய் சின்னம்மாவை, அப்பகுதியை சேர்ந்த நெசவாளர் பெருமக்கள் சந்தித்து, தங்களுக்கு தொழிலே இல்லை என்றும், அண்மைக் காலமாக முறையாக வேலை வாய்ப்பு கிடைக்காமல் தாங்கள் தவித்து வருவதாகவும் தெரிவித்தனர். நெசவாளர்களின் கோரிக்கைகளை புரட்சித்தாய் சின்னம்மா பொறுமையோடும், அக்கறையோடும் கேட்டறிந்தார்.
அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காஞ்சிபுரத்திலிருந்து புரட்சித்தாய் சின்னம்மா சென்னை புறப்பட்டபோது, புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.
அங்கு திரண்டிருந்த கழக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி, வாழ்த்துத் தெரிவித்து சின்னம்மாவை அன்போடு வழியனுப்பினார்கள்.