நெமிலியில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


நெல்வாய் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் விஜய கணபதி ஆகியோருக்கும் பிரேம் என்பவருக்கும் இடையே பைக் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசன், விஜயகணபதியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பிச்சென்றார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இரண்டு சமூகத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மூன்று டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Night
Day