எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானில ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் 23 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், தமிழகத்தின் 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தர்மபுரி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாயப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.