நெல்லையில் விளம்பர திமுக அரசைக் கண்டித்து பேராசிரியர்கள் நூதன போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர அரசைக் கண்டித்து நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் கூட்டமைப்பான மூட்டா சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர்கள் அப்பா பாகுபாடு காட்டாதீங்க என அச்சிடப்பட்ட டீ சர்ட் அணிந்து நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர்.

Night
Day