நெல்லை சுலோச்சன முதலியார் பாலத்தை சேதப்படுத்திய திமுகவினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பழமைவாய்ந்த நெல்லை சுலோச்சன முதலியார் பாலத்தில் 100க்கும் மேற்பட்ட துளைகளிட்டு திமுக கொடிகள் நடப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினார். நெல்லையில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் 182 ஆண்டுகளை கடந்து மக்கள் பயன்பாட்டிற்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை முன்னிட்டு, எவ்வித அனுமதியும் பெறாமல், சுலோச்சன முதலியார் பாலத்தில் திமுக கொடிகளை 100க்கும் மேற்பட்ட இடங்களில் துளையிட்டு திமுகவினர் நட்டுள்ளனர். திமுகவினரின் இந்த அத்துமீறிய செயல் மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் கொடிகளை பறக்க விட்டுள்ள நிலையில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணித்து வருகின்றனர். திமுகவினரின் இந்த அத்துமீறிய செயலால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day