நெல்லை நீட் பயிற்சி மையம் : நீட் பயிற்சி மாணவர்களுக்கு சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் ஊழியர்கள், தற்போதைய ஊழியர்கள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரடி விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தாக்குதலுக்கான மாணவர்கள் இளம்சிறார்களாக உள்ளதால், அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று போலீசார் விசாரணை மேற்கொள்வதற்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

varient
Night
Day