நெல்லை பெரியார் பேருந்து நிலையம் ஓராண்டாகியும் அனுமதி பெறவில்லை - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், ஓராண்டுகளுக்கு மேல ஆகியும் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெரியார் பேருந்து நிலையம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்காக அவசர அவசரமாக திறக்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் முன் அனுமதி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.  அதேபோல் கட்டுமான பணிகளுக்காக எந்தவித அனுமதியும் பெறாமல் கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பெறவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Night
Day