நெல்லை : தென்மேற்கு பருவக்காற்றால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு - 4,111 மெகாவாட்டை எட்டியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை உட்பட தென்மாவட்டங்களில் இரு தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் காற்றாலை மின் உற்பத்தி 4 ஆயிரத்து 111 மெகாவாட்டை எட்டியது.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 21,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு அதிகரிக்கும். இந்தநிலையில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்மாவட்டத்தில் இரு தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் காற்றாலை மின் உற்பத்தி 4 ஆயிரத்து 111 மெகாவாட்டை எட்டியுள்ளது. 

Night
Day