எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தை ஆளும் திமுக அரசின் மீதான மக்களின் கோபம் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில், திமுக மீதான மக்கள் கோபம் தான், தங்களது வெற்றி என்றும், சனாதன விவகாரத்தில் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். அயோத்தி ராமர் கோயிலை அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்க்கட்சியினர் பயன்படுத்தி வந்தனர் என்றும், ஆனால் அதனையும் மீறி அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்ட நிலையில் இந்த பிரச்னையில் இருந்து எதிர்க்கட்சியினர் நழுவி சென்றதாகவும் விமர்சனம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, தேர்தல் பத்திரங்கள் மூலம் யார், யார் பணம் கொடுத்தார்கள், எந்த நிறுவனம் பணத்தை கைமாற்றியது, கைப்பற்றப்பட்ட பணம் எங்கு சென்றது போன்ற அனைத்தும் தெள்ள தெளிவாக தெரிந்துள்ளதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.