தமிழகம்
மெரினா லூப் சாலையில் மீனவ மக்கள் போராட்டம்
சென்னை லூப் சாலையில் பொது போக்குவரத்தை தடை செய்து மீனவர்கள் பாதுகாப்பு ம?...
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளில் அரசு ஊழியர் மயக்கம் போட்ட நிலையில், அதனை படம்பிடிக்க சென்ற பத்திரிகையாளரை ஆட்சியர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொக்கிரக்குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம் போல் மனுநீதி நாள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஆட்சியர் கார்த்திகேயன் அரசு ஊழியர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மானூர் ஊராட்சி ஒன்றிய ஊழியர் முருகன் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அதனை படம் பிடித்த பத்திரிகை புகைப்பட கலைஞரின் செல்போனை பறித்த ஆட்சியர், அவரை மிரட்டியுள்ளார். மேலும் பத்திரிகையாளருடன் ஆட்சியர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை லூப் சாலையில் பொது போக்குவரத்தை தடை செய்து மீனவர்கள் பாதுகாப்பு ம?...
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி திமுக தலைவர் பல்வேறு ஊழல்கள் செய்துள்ள...