நெல்லை: குடியிருப்பு பகுதியில் உலா வரும் 2 கரடிகள் - பொதுமக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே இரவு நேரத்தில் உலவும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் கரடிகள் மலையடிவாரத்தை விட்டு ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு பாபநாசம் அருகே பால்ராஜ் என்பவருடைய வீட்டிற்குள் இரண்டு கரடிகள் புகுந்து அங்கு இங்குமாக உலாவியது. இந்த கரடிகள் உலாவும் வீடியோவை பால்ராஜ் என்பவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் இப்பகுதியில் கரடிகள் உலாவுவதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day