நெல்லை: மருத்துவ செலவு தொகையை வழங்காத தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவ செலவு தொகையை வழங்காத தனியார் காப்பீட்டு நிறுவனம், பயனாளிக்கு சுமார் 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த மல்லிகா, நெஞ்சுவலிக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கு சுமார் 34 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார். இதையடுத்து தான் மருத்துவ காப்பீடு செய்துள்ள தனியார் மருத்தவ காப்பீட்டு நிறுவனத்திடம் செலவு செய்த தொகையை கேட்டபோது பணம் தராமல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம்,  மருத்துவ செலவு 34 ஆயிரம், மனஉளைச்சலுக்கு 50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு 10 ஆயிரம் என சுமார் 90 ஆயிரம் ரூபாய் வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

Night
Day