பகவான் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்! - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பகவான் மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை சிறப்புடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அறத்தையும், அகிம்சையையும் வலியுறுத்தும் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர் "கொல்லாமையும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமையுமே அறம்" என்பதை உலகிற்கு விளக்கி, அகிம்சை நெறியை தனது வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி, அதன் மாண்பை உலகிற்குப் பறைசாற்றியவர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

உண்மையையே பேசுதல், வன்முறையைத் தவிர்த்தல், எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், பற்றற்றிருத்தல் போன்ற பகவான் மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைபிடித்து உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், மகாவீரரின் உயரிய தத்துவங்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது நெஞ்சார்ந்த "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

varient
Night
Day