பக்ரீத் திருநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும்...

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘பக்ரீத் திருநாள்’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் 

இறைவனே எல்லாம், அவருக்கு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கொண்டு...

இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களது புனிதமும்...

அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும் 

உள்ளத்தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு...

துரோகங்கள் அழியட்டும், உள்ளத்திலிருந்து பகைமை நீங்கட்டும், சகோதரத்துவமும், ஈகை குணமும் தழைத்தோங்கட்டும்...

தியாக சிந்தனைகள் மேலோங்கட்டும், மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்நாளில் உறுதியேற்போம்

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும்...

இஸ்லாமியர்கள் பயன் பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அளித்து அவர்களின் நெஞ்சங்களில்

நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பதை இந்நாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன் 

இந்த சிறப்புக்குரிய நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும்...

மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் 

இந்நாளில் இறைவனின் அருளை பெற சிறப்பு தொழுகை செய்து, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி... ஏழை எளியோருக்கு உணவளித்து, உற்றார் உறவினர்களுடன் ஒன்று கூடி உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும்...

அன்புள்ள இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் -  அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா





Night
Day