பசும்பொன்னில் 10,000 போலீசார் பாதுகாப்பு - 300 சிசிடிவி பொருத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி. தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பசும்பொன்னில் அமைக்கப்பட்டு உள்ள CCTV கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 300 சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன் மொபைல் லைவ் கேமரா கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பசும்பொன்னில் நாளை நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் 62வது குருபூஜைக்காக திருவாடானையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை பேருந்து நிலையம் அருகில் முத்துராமலிங்கதேவரின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. நாளை பசும்பொன்னில் தேவரின் 62வது குருபூஜை விழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பசும்பொன் செல்வது வழக்கம். இதன் காரணமாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பல்வேறு மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 350க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் திருவாடானை தீயணைப்பு துறையினர் வாகனத்துடன் தேவர் சிலை அருகே நிறுத்தி வைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Night
Day