பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் : தமிழகத்தில் விற்பனைக்கு தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

புதுவையை தொடர்ந்து சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் ரொடமைன்-பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. ரசாயனம் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை, அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், ரொடமைன்-பி என்ற செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட பிரிவின்படி, ரொடமைன்-பி என்ற செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்லமிடுதல், தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளது.

பஞ்சுமிட்டாயை இறக்குமதி மற்றும் விற்பனை செய்தல், விழாக்களில் பரிமாறுதல் ஆகியவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Night
Day