படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்துள்ளதாகவும், இது இன்றோ அல்லது நாளையோ வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வறண்ட காற்று உதவியுடன் மீண்டும் தமிழக பகுதிகளை ஓரிரு நாட்களில் அடையக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

Night
Day